Sunday, April 19, 2015


தமிழுக்கு என்  ஒன்றை  அழுத்தவும் .இந்த படத்தின் தலைப்பே அழகாக தமிலிழ் உருவானது.

ஒரு மனிதனுக்குள் ஒரு விஞ்ஞானி பிறக்கிறான். இந்த படத்தை நான் பார்க்கும் போது  இப்படி ஒரு கதை தந்த இந்த படத்தின் டைரக்டர் ராம்ப்ரகாஷ் ராயப்பாவின் அடுத்த படம் காண ஆவலை  தூண்டுகிறது   . காந்த புயலால் அணைத்து கைபேசி வேலை செய்வதில்லை என்றால்  என்ன வாகும் என்று இந்த படத்தின் கதாநாயகனுக்கு வானொலி மூலம் ஓர் செய்தி வாசிக்கபடுகிறது. இதை அந்த கதாநாயகன் எப்படி கையாளுகிறான் என்பதே இந்த கதை.

இது ஒரு முக்கோண கதை. கைபேசியை மையமாக  வைத்து கதை நகர்கிறது. ஒரு தீவிரவாதி சென்னை  நகரத்தை தகர்க்க ஒரு கைபேசி மூலம் இயங்க செய்யும் ஒரு வெடிகுண்டு தயார் செய்து ஒரு கால் டாக்ஸியில் வைத்து விடுகிறான் ஆனால் அது காந்த புயலால் கைபேசி வேலை செய்வதில்லை. 


ஒரு வங்கியில் வேலை பார்க்கும் பெண்  ஒரு கட்டிட  மனையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞனை  அங்கு  தேடிவற எதார்த்தமாக ஒரு குழியில் விழுந்து வெலியேவர முடியாமல்  சிக்கி கொள்கிறாள். அவனை தொடர்பு செய்ய கைபேசி வேலை செய்வதில்லை. இதில் இருந்து அவள் எப்படி மீள்கிறாள் என்பது கதையின் இன்னோரு கோனம்.

நகுல், அட்டைக்கத்தி தினேஷ் ,பிந்துமாதவி யதார்த்தமாக  தங்களது நடிப்பை தந்துள்ளனர். ஊர்வசி நகுளின் அம்மாவாகவும் தனுக்கும் சில 

இந்த படத்தின் டைரக்டர் ராம்ப்ரகாஷ் ராயப்பாவிற்கு எனது வாழ்த்துகள். யதார்த்தமான  கதை, அடுத்தது என்ன என்று சிந்திக்க வைக்கும்  திரைக்கதை.  நலிந்து வரும் சினிமாவை இது போன்ற கதைகள் தலைநிமிர்ந்து நடக்க வைக்கும். 


No comments:

Post a Comment